நள்ளிரவில் தோட்டத்தில் பிரசவித்த பெண் குழந்தையை அங்கேயே விட்டுச்சென்ற பெண்!

 
Baby

ஈரோடு  அருகே நள்ளிரவில் தோட்டத்தில் பிரசவித்த பச்சிளம் சிசுவை துணியில் சுற்றி அங்கேயே பெண் ஒருவர் விட்டுச்சென்ற நிலையில், போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் பெண் சிசு வீச்சு- பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அண்ணாநகரில் மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அங்குள்ள மோட்டார் அறையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் சிசு ஒன்று கிடந்துள்ளது. குளிரில் நடுங்கிய படி கிடந்த சிசுவை வாரி அணைத்து முதலுதவி செய்தவர்கள், இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, தோட்டத்தில் வைத்து பிரசவம் பார்த்த அடையாளங்கள் இருந்தன. 

பெண் ஒருவர் இரவில் தோட்டத்தில் பிரசவம் பார்த்து, பின்னர் குழந்தையை அங்கேயே விட்டு சென்றதும் தெரியவந்தது. அந்த பெண் யார் என தெரியாத நிலையில் குழந்தை ஈரோடு அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். தொடர்ந்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்திற்குள் பிரசவித்த சில மணி நேரமே ஆன பச்சிளம் சிசு.வை பெற்ற தாய் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.