நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுமி பலி

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலை தொடர்ந்து வரும் மூன்றாம் நாளில் காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி சொல்லும் முதல் நாள் தைப்பொங்கல், உழவுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் திருநாள் மாட்டுப் பொங்கல், உறவுகளை சந்தித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் நாள் காணும் பொங்கல்.
காணும் பொங்கல் தினத்தில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவர். அப்போது முதியோரும், பெரியவர்களும் இளம் தலைமுறையினரை ஆசீர்வதித்து பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அவ்வாறு கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் சுற்றுலாத்தளங்களுக்கும், திரையரங்குகளுக்கும் சென்று பொழுது போக்குவர்.
அந்தவகையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் கூட்டம் குவிந்தது. மாமல்லபுரம் தனியார் நட்சித்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.