வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தல்- தந்தையிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

 
kidnap

நாமக்கல்லில் நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்து சிறுமியை கடத்திய இரண்டு பேரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே 11 வயது சிறுமி கடத்தல்

நாமக்கல்லை அடுத்த காளி செட்டிப்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் சரவணன் (39). லாரி டிரைவர். இவரது மனைவி கௌசல்யா (29) இவர்களுக்கு 8- ம் வகுப்பு படிக்கும் ஜெய்சன் (14) என்ற மகனும் 5- ம் வகுப்பு படிக்கும் மௌனிஷ்னா (11) என்ற மகளும் உள்ளனர். சரவணன் லாரி ஓட்ட சென்றுவிட்டதால் மற்ற மூவரும் வழக்கம் போல நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளனர். 

நள்ளிரவு 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த கொளசல்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரையும் அவரது மகன் ஜெய்சன் ஆகிய இரண்டு பேரையும் கை கால்களை கட்டி போட்டு விட்டு தூங்கி கொண்டிருந்த சிறுமி மௌனிஷ்னாவை கடத்தி சென்றுவிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களது கை கால்களில் போட்டிருந்த கட்டுகளை அவிழ்த்துள்ளனர். பணி முடிந்து காலை வீடு திரும்பிய சரவணனிடம் இது குறித்து காணவரிடம் கூறி கூறியுள்ளார். குழந்தை கடத்தல் குறித்து எருமபட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே காலை 9 மணியளவில் சிறுமியின் தந்தை சரவணனுக்கு மர்ம நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கொடுத்தால் சிறுமியை விட்டு விடுவோம் என கூறியுள்ளனர். சிறுமியை கடத்திய மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.