பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

 
murder

சென்னை அமைந்தகரையில் பிரியாணி கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

சென்னை அமைந்தகரை கலெக்டர் காலையை சேர்ந்தவர் 33 வயதான் நாகூர் கனி. இவர் அதே பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் நாகூர் கனி பிரியாணி கடையில் இருந்த போது நேற்று இரவு அந்த கடைக்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்துள்ளது.  அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த அரிவாள் மற்றும் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றது. உடலின் பல்வேறு பகுதிளில் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த நாகூர் கனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் போலீஸார், உயிரிழந்த நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தனிப்படை அமைத்து தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.