மே 4- ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

 
summer

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் கடுமையாக சுட்டெரித்துவரும் நிலையில்,  கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 104.5°, 106.3°, 108 ° என வெப்பநிலை பதிவாகிவருகிறது.

கடும் வெயில் - ஒரே நாளில் 30 பேர் பலி

இந்நிலையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. மே 4 முதல் மே 28 வரை தொடர்ந்து வெயிலின் தாக்கம் மிகமிக கடுமையாக இருக்கும். அனல் காற்று வீசுவதால்  இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே வராமல் தங்களது வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் கோடை வெயிலில் தவிக்கும் மக்கள் தாகத்தை தணிப்பதற்காக குளிர்பானம் மற்றும் பழரச விற்பனை நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.