பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

 
rape

திண்டுக்கல்லில் 12 வயதுடைய பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை உட்பட மூன்று பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர்  லிங்கமூர்த்தி ( வயது 47). இவர் சமையல் வேலைக்கு செல்பவர். இவருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த குடிப்பழக்கத்தின் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் இதனால் இவரது மனைவி லிங்கமூர்த்தியை பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக லிங்கமுர்த்தி தனியாக வசித்து வருகிறார். 

1,099 Raped Stock Photos and Images - 123RF

இவர் அடிக்கடி சமையல் வேலைக்கு செல்வதால் தனது மகளை தனது நண்பரான  கண்ணன் (வயது55) வீட்டில் தங்க வைத்து வளர்த்து வந்தார். குடிபோதையில் லிங்கமூர்த்தி மற்றும் அவரது நண்பர் கண்ணன் ஆகியோர் சேர்ந்து 12 வயது தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பாரதிபுரத்தில் அரிசி கடை நடத்தி வரும் முகமதுரபிக் ( வயது60) என்பவரும் ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த 12 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை  பரிசோதனை செய்த பெண் மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து  குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சிறுமியிடம்  குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தினர் அப்பொழுது  தந்தை மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார். இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை லிங்கமூர்த்தி அவரது நண்பர்கள் கண்ணன் மற்றும் முகமது ரபிக் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
           

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை தான் என்ன செய்கின்றோம் என்பதை மறந்து பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பாரதிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது