மகனை வெட்டிக் கொன்று விட்டு தந்தை தலைமறைவு

 
q

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அடுத்த காட்டுராமன்பட்டி.    இப்பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்.  இவரின் மகன் முத்துக்குமார் இவர். முத்துராஜ் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.  அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு மகன்கள் உள்ளனர்.    இவரின்  இளைய மகன் முத்துக்குமார் சரியாக வேலைக்கு போகாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்திருக்கிறார்.   அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்திருக்கிறார்.

நேற்று இரவும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார் முத்துக்குமார் .  தனக்கு  இருந்த போதை போதாது என்று சொல்லி மேலும் மது அருந்துவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டு ரகளை செய்திருக்கிறார்.

b

 முத்துராஜ் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து தந்தையை வெட்ட முயன்றிருக்கிறார்.   இதில் சுதாரித்துக் கொண்ட முத்துராஜ்,  தன் மகனை பிடித்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறார்.   அப்போது அவர் வைத்திருந்த அரிவாளால் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிஇருக்கிறார்.  கழுத்தில்  வெட்டுப்பட்ட முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் . 

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி , நாலாட்டின் புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர் .  முத்துக்குமார் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் முத்துராஜை தேடி வருகின்றனர்.

 கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிய வந்திருக்கிறது.