கண்ணாடி விரியன் பாம்பின் முன் நாக்கை நீட்டியவருக்கு நேர்ந்த கதி

 
e

பரிகாரம் என்று ஜோதிடர் சொன்னதை நம்பி கண்ணாடி விரியன் பாம்பின் முன் நாக்கை நீட்டியவருக்கு அந்த நாக்கையே நீக்கும் படி ஆகியிருக்கிறது. 

 ஈரோட்டத்தைச் சேர்ந்த விவசாயி தனது கனவில் அடிக்கடி பாம்பு வருகிறது என்று தன் மனைவியிடம் சொல்லி இருக்கிறார்.  அதற்கு மனைவி தனக்கு தெரிந்த ஜோதிடரிடம் சென்று இது குறித்து பேசி விட்டு வாருங்கள் என்று அனுப்பி இருக்கிறார்.   பரிகாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு செய்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

க்ஹ்

 இதை அடுத்து மனைவி சொன்னபடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்த கோவிலுக்கு சென்று இருக்கிறார் விவசாயி .  அங்கிருந்த ஜோதிடரிடம் பாம்புகள் கனவில் வருவது பற்றி கேட்டிருக்கிறார்.   பாம்புகளுக்கு பரிகாரம் செய்தால் நீங்கள் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்று சொல்லியிருக்கிறார்.  அதன் பின்னர் பாம்புகள் கனவில் வராது என்று கூறியிருக்கிறார். 

உடனே அந்த  விவசாயி, ஜோதிடர் சொன்ன கோவிலுக்கு சென்று அங்கிருந்த சாமியாரிடம் இது பற்றி கூறி இருக்கின்றார். அதற்கு அவர்,  தன்னிடம் இருக்கும் கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து இந்த பாம்பின் முன் நாக்கை  நீட்ட வேண்டும் என்று சொல்ல,  உடனே  விவசாயி நாக்கை நீட்ட அந்த பாம்பு நாக்கில் தீண்டி இருக்கிறது.  இதனால் விவசாயியின் உடலில் விஷம் ஏறி மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார்.   அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பாம்பு தீண்டிய நாக்கை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல,  விவசாயி சம்மதிக்க,  நாக்கை நீக்கி உள்ளனர் மருத்துவர்கள்.