கோபிநாத் சொன்ன காவிய தந்தை.. கடுப்பான தாமரை

 
t

நீயா நானா நிகழ்ச்சியில்  தன் கணவரை மிகவும் ஏளனப்படுத்தி அவரின் அறியாமையை அவரின் படிப்பின்மையை மிகவும் கேவலப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார் அவரின் மனைவி.  இதில் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் அந்த பெண்ணிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றார்.  ஆனந்தத்திற்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிப் பார்த்தார்.  ஆனால் அந்த பெண் கேட்பதாக இல்லை.  தொடர்ந்து தனது கணவனின் அறியாமையையும் படிப்பின்மையையும் கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.

 இந்த நிலையில் தனது மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன்.   நான் படிக்கும்போது பத்து மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க மாட்டேன் .  ஆனால் என் மகள் 80,  90 மதிப்பெண்கள் எடுப்பதை பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கும்.  அதனால் மணி கணக்கிலிருந்து அதை பார்த்துக்கொண்டு இருப்பேன். ஆனந்தப்படுவேன் என்று சொல்ல,  பார்வையாளர்களை கலங்க வைத்தது.   ஆனால்,  அப்போதும் அதை அவரின் மனைவி கிண்டல் செய்துகொண்டிருந்தார்.

ன்ன்

 இதைக் கேட்ட கோபிநாத் ஒரு தகப்பன் தன் மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறான் என்றால் அந்த தந்தை எனக்கு காவிய தந்தையாக தெரிகிறார் என்று சொல்லி அவருக்கு பரிசளித்தார்.  அப்போது அந்த கணவரின் மனைவி முகத்தில் ஈ ஆடவில்லை.   பேய் அறைந்தது மாதிரி நின்று கொண்டிருந்தார்.

  நெட்டிசன்கள் அந்த பெண்ணை வறுத்து எடுத்து வருகின்றனர்.  கடுமையான விமர்சனங்களை சொல்லி வருகின்றனர்.   அந்த பெண்ணின் கணவருக்கும் கோபிநாத் செய்த செயலுக்கும் வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.   ஆனால் திரைப்படக் கவிஞர் தாமரை மட்டும் அதற்கு எதிர்மறையான கருத்து சொல்லி இருக்கிறார்.

கி

 கணவனைப் பிரிந்து தனியாக மகனை வளர்த்து வருவதால் அந்த கடுப்பில் அவர் இப்படி சொல்லி இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  கவிஞர் தாமரை தனது பதிவில்,  அம்மாக்கள் இல்லை என்றால் குழந்தைகள் பள்ளி படிப்பை கூட தாண்டாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன்.  படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க கண்டிப்பாக தான் இருப்பார் வீட்டில் உள்ள அனைவரிடமும்.  அதையெல்லாம் பொதுவில் ஒரு கணத்தில் பார்த்துவிட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு.  

 பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலையும் செய்து படித்த படிப்புக்கு வெளிவேளையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்து இன்னும் பல செய்துகள்.. கடுமையும் விளைவுபடுத்தலும் இருந்தே தீரும்.    உண்மையில்இஎத்தகைய பெண்களால் தான் அந்த குடும்பங்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு தலைநிமிரும்.  அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும்.

த்

 இந்த பெண்கள் எல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.  கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது அவரது மனைவி அங்கே குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து கேட்டுக் கொண்டிருக்கக்கூடும் என்று பதிவிட்டுள்ளார்.

 எல்லா தந்தைகளையும் காவிய தந்தையாக கோபிநாத் சொல்லவில்லை.  அந்த தந்தையின் செயலை பார்த்து வியந்து தான்,  ஆச்சரியப்பட்டு தான் மனம் உருகித்தான் அவர் காவிய தந்தை என்று சொன்னார்.  ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் வெறுப்பை தாமரை இந்த பதிவில் கொட்டி இருக்கிறார்.   அந்த காவிய தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.