வரைவு வாக்காளர் பட்டியல் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்..

 
வரைவு வாக்காளர் பட்டியல் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்..


தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  

சென்னையில்  வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது.  இதில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்துகொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அதில், தமிழ்நாட்டில்  மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து  26 ஆயிரத்து  182 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.  இதில் 3 கோடியே  03 லட்சத்து  95 ஆயிரத்து 103 பேர்  ஆண் வாக்காளர்களாவார்.  மேலும், 3 கோடியே 14 லட்சத்து 23 பேர் 321 பேர் பெண் வாக்காளர்களாவர்.  

வரைவு வாக்காளர் பட்டியல் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்..

மேலும், 7,758  மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.  அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2.44 லட்சம் இறந்த வாக்காளர்களின்  பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாவும்,  15.25 லட்சம் இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், வாக்காளர் சேர்ப்பு ,வாக்காளர் நீக்கம், விவரங்கள் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள சென்னையில் நவ.  12 ,13 ,26 ,27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.