சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதம் வருத்தத்திற்குரியது - அமைச்சர் பொன்முடி

 
Ponmudi

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திற்குள்ளாகவே வெளியிட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

ponmudi

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான பொது தேர்வு இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது.  முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறி வகை வினா - விடை மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.  தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது.  ஏப்ரல் மாதம் தொடங்கிய  இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வுவாக  நடைபெற்றது.  இதில் புறநிலை வகை வினாக்களும் , அகநிலை வினாக்களும் இடம் பெற்றன.  இரண்டு அமர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் செயல்பாடு உள் மதிப்பீட்டு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.  இருப்பினும் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.  கடந்த வாரமே சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தற்போது முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

cbse exams

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "புதிய கல்விக் கொள்கையை படித்துப் பார்க்க வேண்டும் என்கிறார் ஆளுநர்.  அதில் மும்மொழி கொள்கையே  வலியுறுத்தப்படுகிறது.  இந்தி படிப்பவர்களுக்கு கூடுதல் ஊதியம்  வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இந்த அளவிற்கு  தாமதப்படுத்துவது  வருத்தத்திற்குரியது.  தேர்வு முடிவு தாமதமாக வருவது  மாணவர்களுக்கு பாதிப்பு. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தாமதப்படுவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது. எனவே  இந்த மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் . திட்டமிட்டபடி வரும் ஜூன் 18ஆம் தேதி பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்" என்றார்.