ரயிலில் இருந்து திடீரென கழண்டு சென்ற பெட்டிகள்.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள்..

 
ரயிலில் இருந்து திடீரென கழண்டு சென்ற பெட்டிகள்.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள்..

சென்னையில் இருந்து கோவை  சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து, திடீரென  இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதால் விபத்து நேர்ந்தது.  அதேநேரம் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.  

 சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து  கோவைக்கு  நேற்று இரவு 10.10 மணிக்கு  சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகே இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, எஸ் 7 (S7)மற்றும் எஸ் 8 (S8) ஆகிய இரண்டு  ரயில்  பெட்டிகளில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் ரயிலில் இருந்த பயணிகல் அச்சத்தில் அலறினர்.  இதனையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட  ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால்  சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் நல்வாய்ப்பாக  உயிர் தப்பினர்.

ரயிலில் இருந்து திடீரென கழண்டு சென்ற பெட்டிகள்.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள்..

பின்னர் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இரண்டு பெட்டிகளையும் இணைக்கும் கம்பி சேதமானதால் எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய இரண்டு பெட்டிகள் தனியாக கழண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.   பின்னர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு பெட்டிகளுக்கும் புதிய இணைப்பு கம்பிகள் மாற்றப்பட்டு ரயில் கோவையை நோக்கி புறப்பட்டு சென்றது.  இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக  காத்திருக்கும்  நிலை ஏற்பட்டது.