மாடியில் நின்று போன் பேசிய நபர் மீது கதிர்வீச்சு பாய்ந்து செல்போன் வெடித்தது!

 
power

மாடியில் இருந்து செல்போன் பேசிய நபர் மீது கதிர்வீச்சு பாய்ந்ததில் செல்போன் வெடித்து சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

13 வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. உயிர் பிழைத்த அதிசயம்! சிறு  காயம் மட்டுமே! | 23-year-old man miraculous escape after falling off the  13th floor in Surat - Tamil Oneindia

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த பகவத்சிங் நகர் வாவுசி தெருவில் வசித்து வருபவர் ராம்குமார் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள அன்பும் மெஸ் என்கின்ற உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உணவகத்தின் உரிமையாளர் மகேஸ்வரி வீட்டில் தங்கியுள்ள அவர்ம் நேற்று மொட்டை மாடியில் இருந்து செல்போன் பேசியதாக கூறப்படுகிறது

உயர் மின்னழுத்த கோபுரத்திற்கும் மொட்டை மாடிக்கும் 10 அடி அளவே உள்ள நிலையில் மின் அழுத்த கோபுரத்திலிருந்து செல்போனுக்கு கதிர்வீச்சு மூலம் ஸ்பார்க் அடித்து தீப்பற்றியது,  போன் வெடித்த அதிர்ச்சிச்சியில் காயங்களுடன் இளைஞர் போனை தூக்கி வீசி இருக்கிறார்.இதில் அருகிலிருந்த ஏசியும் வெடித்து சிதறியது

இதில் ராம்குமாரின் கை, கால் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், 35% தீக்காயங்களுடன் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் வரவழைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.