எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு!!

 
eps

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ep

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ரூபாயை 4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கடந்த 2018 ஆம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் . வழக்கை விசாரணை நீதிபதி வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை மூன்று மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டார்.  சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது .

ep

எடப்பாடி பழனிசாமியின் மனு விசாரித்த நீதிபதிகள்  2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.  அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.  4ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் முறையீடு செய்தார்.  வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணை முடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.  இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விரைந்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

supreme court
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட்  2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மனுதாரர் ஆர். எஸ். பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம்  ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.