மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்! தீக்கிரையான உரிமையாளர்

 
fire

பழனி அருகே சாலையோரா மின்கம்பத்தில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது.  காரில் சென்றவர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fire

பழனி- தாராபுரம் சாலையில் வாகரை என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  கார் மின்கம்பத்தில் மோதியதில்  கார் தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து காரில் பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பரவியது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் தீயில் கருகி பலியாகினர். காரில் இருந்த நபர் யார் என்பது குறித்து கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.