மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பேருந்து ஓட்டுநர்

 
d

மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது அரியலூர் மகிளா நீதிமன்றம்.   
அரியலூர் மாவட்டத்தில் கொடுக்கூர்  குடிகாடு என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.  அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து  வந்துள்ளார்.   கடந்த ஆண்டு தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியரிடம் இவர் அத்து மீறி இருக்கிறார். அந்த மாணவியை கட்டிப்பிடித்த முத்தம் கொடுத்து இருக்கிறார்.

ஜ்

 இதை அடுத்து அந்த மாணவி தன் பெற்றோரிடம்  சொல்ல,   ராமலிங்கம் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் தனியாக இருந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 இதை அடுத்து வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  விசாரித்து வந்த நீதிமன்றம்  விசாரணை நிறைவடைந்ததை அடுத்து ராமலிங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது.