16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்!

 
love

லால்குடியில் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் மற்றும் சிறுமியின் கருக்கலைப்புக்கு  உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர், சிறுமியின் உறவினர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Couple held for sexual abuse of 12-year-old girl in Kochi - KERALA -  GENERAL | Kerala Kaumudi Online

திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனது பெரியம்மா அரவணைப்பில் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் சிறுமி வேலைக்கு சேர்ந்தார். அப்போது, இவரது கம்பெனி அருகில் உள்ள கம்பெனியில் வேலை செய்த சதீஸ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து , சிறுமி வேலையை விட்டு வீடு திரும்பினார். அப்போது, சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், பயந்து போன சிறுமி நன்னிமங்கலம் கிராம சுகாதார செவிலியர் சிஸிலினாவிடம் கூறினார். கடந்த ஜூன் 24 ம் தேதி சிஸிலினா மற்றும் நன்னிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி ஜோதி ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு, அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில்,  கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற இவர்கள் சிறுமியின் வயதை 18 வயது என தெரிவித்து, சிறுமியின் அட்டெண்டராக ஜோதியை காண்பித்து, சிறுமிக்கு பெண் மருத்துவர் ஒர்வர் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த லால்குடி மகளிர் போலீசார் திருச்சி மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, சிறுமி, ஜோதி ஆகியோர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். மேலும், செவிலியர் சிஸிலினா 
மருத்துவமனைக்கு சென்று, சிறுமியின் டிஸ்சார்ஜ் சமரியை பெற்றுக் கொண்டார் என தெரியவருகிறது. புகாரின் பேரில் லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மற்றும் சிறுமியின் சட்டவிரோத கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர் சிஸிலினா, உறவினர் ஜோதி ஆகியோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.