கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திவிட்டு ஓடிய சிறுவன்

 
kf

திடீரென்று தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டதால் அந்த மாணவியை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார் 17 வயது சிறுவன்.  சென்னையில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.  

 சென்னையில் கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வம்சி(வயது18).   ஆவடி அடுத்த தனியார் கல்லூரியில் பி சி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.   இவரும் சென்னை பெரவலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.   இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் திடீரென்று சிறுவனுடன் பழகுவதை அந்த கல்லூரி மாணவி நிறுத்தி இருக்கிறார் .

m

பலமுறை வம்சிக்கு போன் செய்தும் அவர் எடுக்காமல் இருந்திருக்கிறார்.  இதனால் கடும் கோபத்தில் இருந்த சிறுவன் கொளத்தூர் பாலாஜி நகர் நாகாத்தம்மன் கோயில் அருகே சென்று நின்று கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது அந்த வழியாக வந்த வம்சியை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்.   இனிமேல் பேச முடியாது என்று வம்சி சொல்லவும்,  எதற்காக என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

சிறுவனுடன் பேச முடியாது என்று  வம்சி உறுதியாக சொல்ல,  அதை அடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு  தப்பி ஓடி இருக்கிறார்.

 ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வம்சியை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.   பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர் .  ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.