ரசாயன பூச்சி முடிந்து புதுப் பொலிவுடன் காணப்படும் திருவள்ளுவர் சிலை

 
thiruvalluvar

கன்னியாகுமரியில் இரசாயன பூச்சு முடிந்து புதுப் பொலிவுடன் காணப்படும் திருவள்ளுவர் சிலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


சர்வதேச சுற்றுலா தலமான குமரிக்கு உள்ளூர், வெளியூர்,வெளிநாடுகளில் இருந்து ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருவர்கள்.அவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சென்று கண்டு ரசிப்பார்கள்.இதற்காக பூம்புகார் கப்பல் கழகம் சார்பாக சுற்றுலா படகுகளும் இயக்கப்படுகின்றது. கடல் உப்பு காற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசயான கலவை பூச்சும் பணி நடைப்பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரசாயன பூச்சு முடிந்து புதுப் பொலிவுடன் காணப்படும் திருவள்ளுவர் சிலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு  குடியரசு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.