சுவாதியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

 
ko

 கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

 கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கினை விசாரித்து வந்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீரன் சின்னமலை  தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

su

 இந்த தீர்ப்பினை எதிர்த்து பத்து பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை மேல்முறையீடு செய்திருந்தனர் .   இதற்கிடையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் வழக்கினை விசாரித்த சிபிசிஐடி போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 இந்த வழக்குகளை நீதிபதிகள் ரமேஷ்,  ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.   இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறிவிட்டார்.  இதனால் சுவாதி மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்தது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுவாதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.  

 இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது . அப்போது சுவாதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.