கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்.. கைக்கூப்பி வரவேற்ற அர்ச்சகர்கள்..

 
கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்.. கைக்கூப்பி வரவேற்ற அர்ச்சகர்கள்..

 கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில்,  அப்பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.  

கோவை கோட்டை  ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  அந்த பதற்றத்தை  தணிக்கும் வகையில் கோட்டை பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜமாத் உலமாக்கள் இன்று,   கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடக்கும் மத  நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்களை கோவில் செயலர் பிரபாகரன் மற்றும் அர்ச்சகர்கள் இணைந்து கைகூப்பி, சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். ஜமாத் கூட்டமைப்பு தலைவர் இனாயகதுல்லா தலைமையில் 13 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள் ,  கோவையில் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று கூறினர்.

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்.. கைக்கூப்பி வரவேற்ற அர்ச்சகர்கள்..

அதன் பிறகு பேசிய ஜமாத் நிர்வாகிகள்; “கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை  வன்மையாக கண்டிக்கிறோம்.  இஸ்லாம் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. அமைதியை போதித்து வருகிறோம். ஆன்மீகவாதிகளாக இருக்கிறோம். இங்கு வாழும் மக்கள் அண்ணன் தம்பியாக வாழ்கிறோம். சிறுபான்மை மக்கள் அனைவரும் பெரும்பான்மையினரோடு, நல்லிணக்கத்தோடு வாழ்வதை விரும்புகிறோம். இந்த வருகை நல்லிணக்கம் பேணுவதற்காக,  தொடர்ந்து கோவையில் ஜமாத்துகள் ஒன்றிணைந்து,  சிறுபான்மை மக்கள் பெருபான்மை மக்கள் ஒன்றிணைந்து நற்பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.  எந்த அரசியலுக்கும் யாரும் ஆட்பட்டு விடக்கூடாது” என்று கூறினர்.

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்.. கைக்கூப்பி வரவேற்ற அர்ச்சகர்கள்..

மேலும், “கோவிலுக்கு வந்த எங்களை  நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு வரவேற்று சால்வை அணிவித்து  பெருமைப்படுத்தினார்கள் . மத அமைதி நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான இடமாக கோவை இருக்க வேண்டும்.  எந்த வடிவில் பயங்கரவாதிகள் வந்தாலும் இடம் கொடுக்க மாட்டோம்.  அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக வாழ விரும்புகிறோம். இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.  அரசியலுக்கு மதத்தை பயன்படுத்தாதீர்கள் என தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.