கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு

 
raid

திருக்கோவிலூரில் எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது.

DNA Explainer: What are Income Tax raids, who orders them and how do they  take place?

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எம்.எல்.எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்தில் கடந்த 2 ஆம் தேதி இரண்டு கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 10:30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் முதல்கட்டமாக வரி எய்ப்பு புகார் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.  இந்த கிரீன்ஸ் சூப்பர்  மார்க்கெட்டில் 30க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த சூப்பர் மார்க்கெட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில்,
வாடிக்கையாளர்களும் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

கிரீன்ஸ் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகத்தில் இன்று ஐந்தாவது நாளாக வருமானத்துறை அதிகாரிகள் காலை முதல் இரவு 7 மணி வரை சோதனையில் ஈடுபட்ட வந்த நிலையில் வருமானவரித்துறை  அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்விற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.