இந்திய அரசு தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!!

 
thirumavalavan

ஐநா மனித உரிமை சபையிலும் இதர தளங்களிலும் இந்திய அரசு தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன்  வலியுறுத்தியுள்ளார்.

thiruma

ஈழத் தமிழர்களின் நலன்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈழத் தமிழர்களின் நலன்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்று பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினேன்: ஐநா மனித உரிமை சபையிலும் இதர தளங்களிலும் இந்திய அரசு தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ராஜூ ஜெயவர்த்தனா ஒப்பந்தமாக பார்க்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தமாகவே  கருத்தில் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கு பாஜக அரசு உரிய அழுத்தத்தை தர வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணம் சிங்களமயமாதலிலிருந்து தடுக்கப்பட வேண்டும். தமிழர்களின் கைகளிலிருந்து பறிபோவதை தடுக்க வேண்டும். காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.