தமிழ்நாட்டில் 7 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது

 
election commision

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சார்ந்த பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 86 கட்சிகள் தற்போது இல்லை எனக்கூறி  பட்டியலில் இருந்தும் நீக்கியது. 

And the winner is Election Commission | The Indian Express

கட்சி பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல 6 ஆண்டுகள் கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏழு கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை, 

1. கொங்கு நாடு ஜனநாயக கட்சி
2. மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்
3. எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி
4. Patriot " தேசபக்தி"
5. புதிய நீதிக் கட்சி
6. தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம்
7. தமிழர் கழகம்

உள்ளிட்ட ஏழு கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் செயல்படாத கட்சிகள் என தமிழகத்தை சேர்ந்த 14 கட்சிகளின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,

1. அனைத்திந்திய ஆதித்தனார் கட்சி
2. அகில இந்திய சிவில் உரிமைகள் பாதுகாப்பு கட்சி
3. அனைத்திந்திய சிங்காரவேலர் கட்சி. 
4. அனைத்திந்திய தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம். 
5. அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி
6. கிறிஸ்டின் முன்னேற்ற கழகம். 
7. தேசிய பாதுகாப்புக் கட்சி
8. லட்சிய திராவிட முன்னேற்ற கழகம். 
9. ஹிந்துஸ்தான் தேசிய கட்சி
10. காமராஜர் ஆதித்தனார் கழகம்
11. கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
12. லெனின் கம்யூனிஸ்ட் பார்ட்டி
13. மாநில கொங்கு பேரவை