அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை - ஈபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!!

 
admk

அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ள ஆலோசனையில்  ஈபிஎஸ் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ep

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.  2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட  நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை  இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்தப்படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  தலைமையில்,  தொடர்ந்து மாவட்டங்களில் தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

election

இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையர் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்ப துரை ஆகியோர் பங்கேற்கும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.