முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு நிறைவு!!

 
mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த மே 7-ஆம் தேதி பதவியேற்றார். முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச்செயலக வடிவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பல புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mk stalin

இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.