என் மீது பாசமும், பற்றும் கொண்டவர்.. தாய்மாவாவுக்கு 100வது பிறந்தநாள் - வாழ்த்து கூறிய முதல்வர்..

 
stalin


தனது தாய்மாமாவின்  100வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

இதுதொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ எனது தாய் மாமாவும் கழகப் பற்றாளருமான தட்சிணாமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு 100-வது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். திருவாரூர் மாவட்டத்தில் எப்போது நான் சுற்றுப்பயணம் சென்றாலும், என் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பேன். அவரும் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து என்னை நலம் விசாரிப்பார்.

ஸ்டாலின்

தனது வாழ்நாளில் நூறாண்டுகளைக் கண்டுள்ள அவரது நினைவாற்றல் இன்றும் என்னை வியக்க வைக்கிறது. அந்த அளவிற்கு நடப்பு விவரங்களை விரல் நுனியில் வைத்து என்னைச் சந்திக்கும் நேரங்களில் பேசுவார். அவரது நூறாவது பிறந்தநாளான இன்று, அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல்நலனுடன் எங்களோடு மேலும் பல்லாண்டு பயணித்திட இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.