செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்ட முதல்வர்

 
cm

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட்ட முதல்வர், இளம் வயது வீராங்கனை ராண்டாவுக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Image

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3ம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற்ற  நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாலை 6 மணி அளவில் போட்டி நடைபெறும் அரங்கிற்கு நேரில் வந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட்டார். அவருடன் செஸ் கூட்டமைப்பு அலுவலர்கள், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர். போட்டிகளை சென்று பார்வையிட்ட பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள இளம் வயது வீராங்கனை பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி ராண்டா சேடருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Image

முதல்வர் வருகைக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் செஸ் தொடரை காண வந்திருந்தார். அப்போது பேசிய அவர், நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு நடத்துவதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் போட்டியை போல பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை கிராமங்கள் தோறும் ஏற்படுத்த கோரிக்கை வைத்தார்.