‘மாமல்லபுர மர சிற்பம்’ - பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர்..

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 5 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரினை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
இதற்காககுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அடையாறு ராணுவ தளத்தில் இருந்து சாலை மார்கமாக , மாலை 6 மணியளவில் நேரு ஸ்டேடியத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். முன்னதாக விழா தொடங்கி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பிரதமரின் வருகையையொடி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் மாமல்லபுரம் மர சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடிக்கு நினைவுவ் பரிசாக வழங்கினார்..