#BREAKING பிரதமரை சந்திக்க அடுத்தவாரம் டெல்லி செல்கிறார் முதல்வர்!!

 
ttn

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப்பயணமாக அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

tn

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்   நவீன உள் விளையாட்டரங்கம், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி ஆகியவையும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

tn

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை அடுத்த வாரம் டெல்லி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைக்கிறார்.செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள  நிலையில் வருகிற 28ஆம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார். அவருடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.