ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தந்த கமலுக்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

 
tn

 ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தந்த கமலுக்கு  முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

kamal

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். இந்த சூழலில் , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார். அத்துடன் அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கூறினார்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன்  அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.