பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்குவதற்கு நன்றி!!

 
mutharasan

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்குவதற்கு முத்தரசன் நன்றி தெரிவித்துகொண்டுள்ளார்.

இதுக்குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அண்மையில் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவுடன் ரொக்கப் பணம் ரூ 1000/= ம் வழங்குவதாக அறிவித்தது.இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, தேங்காய் போன்ற பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அரசியல் கட்சிகளும் விவசாயிகள் சங்கங்களும் அரசிடம் வலியுறுத்தின.

pongal

பொதுமக்களின் உணர்வை பிரதிபலிக்கும் ஜனநாயக பண்பு கொண்ட முதலமைச்சர் திரு மு . க ஸ்டாலின், கடுமையான நிதி நெருக்கடி நிலவும் சூழலிலும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்து பேசி பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்க முடிவு செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது பொங்கல் பண்டிகையை மனதில் கொண்டு செங்கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையூட்டும்., 

govt

பொங்கலிடும் மக்களுக்கு தித்திக்கும் நடவடிக்கையாகும். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி வரவேற்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.