ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியதற்கு நன்றி - முதல்வர் பசவராஜ் பொம்மை

 
p

ரஜினிகாந்த் கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னட மக்களின் மீதான அன்பை வெளிப்படுத்தி விட்டார்.  அவருக்கு என் இதய பூர்வமான நன்றி என்று தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

pa

 கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அன்று மாரடைப்பினால் தனது 46வது வயதில் திடீரென்று மரணம் அடைந்தார்.  அவரது நரை மரணம் இந்திய திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 புனித் ராஜ்குமாரின் மறைவை அடுத்து அவரின் கலைப்பணி, சமூக சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடக ரத்தனா விருது அறிவித்தார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.  இந்த விருதை வழங்குவதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார்  முதல்வர் பசவராஜ் பொம்மை.

ju

இந்த அழைப்பை ஏற்று தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றார்.   ஜூனியர் என்டிஆரும் பெங்களூருக்கு வந்திருந்தார். இருவருக்கும் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஆகியோர் சிறப்பு வரவேற்பு அளித்தார்கள்   அதன் பின்னர் ரஜினிகாந்தும் ஜூனியர் என்.டி.ஆரும் கர்நாடக ரத்னா விருதை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு  வழங்கினார்கள்.  இந்த விருதை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வின்  பெற்றுக் கொண்டார்.

விழாவில் ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசியபோது,   எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் போன்ற சினிமா ஜாம்பவான்கள் 50 ஆண்டுகளில் செய்த சாதனையை புனித் ராஜ்குமார் 20 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார் என்றார்.

ra

 தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் ,  அப்பு என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்ட  கடவுளின் குழந்தை சில காலம் நம்முடன் இருந்துவிட்டு தனது திறமையை காட்டி விட்டு மீண்டும் கடவுளிடம் சென்று விட்டார் என்று கூறினார்.   ரஜினி தனது பேச்சில் நிறைவாக,  இங்கு வந்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

ntr

 இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை,   மாபெரும் நடிகர்கள் ரஜினிகாந்த்,  ஜூனியர் என்டிஆர் ஆகியோர் எங்களின் அழைப்பினை ஏற்று புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்கியதற்காகவும்,  கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீது உள்ள அன்பையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அதற்காகவும் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.