திமுக நிர்வாகிகளே அதிமுகவுக்கு ஓட்டுப்போட தயார்- தங்கமணி

 
thangamani

ஒன்றரை ஆண்டு காலமாக திமுகவினர் செய்த சாதனை என்னவென்றால் மக்கள் நலனுக்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் ரத்து செய்ததே திமுகவின் சாதனை என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

Senior AIADMK minister P Thangamani tests positive for coronavirus | The  News Minute


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 


பின்னர் நிர்வாகிகளிடம் பேசிய தங்கமணி, “திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருட காலங்களில் செய்த சாதனை என்னவென்றால் மக்கள் நலனுக்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்தது திமுகவின் சாதனை. திமுகவில் உள்ள கட்சி நிர்வாகிகளே திமுக ஆட்சி அமைந்தது ஏன்?, எதற்காக நாங்கள் ஓட்டு போட்டோம்? எப்போது தேர்தல் வரும்? என்ற நினைப்பில் உள்ளனர். தேர்தல் வந்தால் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என திமுகவின் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.  திமுகவினர் தேர்தல் நேரத்தில் 525 தேர்தல் அறிக்கைகளை கொடுத்தனர், கூட்டுறவுத் துறையில் 33 லட்சம் நபர்கள் நகை கடன் பெற்றுள்ளனர், ஆனால் திமுகவினர் 13 லட்சம் நபர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்துள்ளனர், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் என பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் கொள்ளையடித்து வருகின்ற்னர்” எனக் கூறினர்.