நான் எதை பார்த்தும் அலற மாட்டேன் - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி

 
tamilisai

தெலங்கானாவில் தான் அவமதிக்கப்பட்டதாக வரும் செய்தி உண்மையில்லை என தெரிவித்துள்ள தெலங்கானா மாநில ஆளுநர் சௌந்தரராஜன், தான் எதற்கும் அலற மாட்டே என கூறியுள்ளார். 

கும்பகோணம் அருகே, சுவாமிமலையில், 23 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஒரு கட்சியை சார்ந்த பத்திரிகை நான் தெலங்கானாவில் அவமதிக்கப்பட்டதாக எழுதி உள்ளது. நான் என்றுமே அவமதிக்கப்படவும் இல்லை, அலறவும் இல்லை.எதை பார்த்தும் அலற மாட்டேன்.பல லட்சம் ஆசிரியர்கள், பல லட்சம் மக்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் அடிப்படை பணிகளை செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை. அதில், குறைபாடு இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஒட்டுமொத்த மாணவர்களையும், அகில இந்திய தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள் என்பது தான் புதிய கல்விக் கொள்கை. இதை மறுப்பவர்கள், எதனால் மறுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் ஏற்றுக் கொள்வர். அதில் சிக்கல்கள் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள். மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் கூட, இதை ஏற்று தேர்வு எழுத தயாராக இருக்கின்றனர். இவ்வாறு கூறினார்.