தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் தெலங்கானா அரசு - தமிழிசை வேதனை

 
Tamilisai

தெலங்கானாவில் ஆட்சி நடத்தி அரும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி அரசு தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜ வேதனை தெரிவித்துள்ளார். 
 
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று  மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளாதது தவறு. நான் புதுச்சேரி கவர்னர் என்ற முறையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த கூட்டத்தில் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலம் சார்ந்த 75 சதவீத பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இருந்தார். அனைத்து முதல்வர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை.

tamilisai

இந்த கூட்டத்தில் அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க தயாராக இருந்த நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை மறந்து விடுகின்றனர். முதல்வர், அக்கட்சி எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகைக்கு வருவதில் என்ன தடை உள்ளது. கவர்னர் மாளிகை என தீண்டத்தகாத இடமா? அரசியல்வாதியாக இருந்த போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தற்போது கவர்னர் பதவி வகிக்கும் போதும் விமர்சிக்கப்படுகிறேன். நான் வலிமையான நபர். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை யாராலும் தடுக்க முடியாது. ஆன்மிக யாத்திரை ஒன்றில் பங்கேற்க ஹெலிகாப்டர் கேட்ட போதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. சாலை மார்க்கமாகவே சென்றேன்.ஆளுநர் மாளிகை பல முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.