ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி- டீக்கடைகளில் டீ, காபி விலை ரூ.15 ஆக உயர்வு

 
tea shop

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை ரூ15 ஆக உயர்த்த மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

How much investment is required to start a tea stall (tapri) in  Mumbai/Pune? - Quora

மதுரை மாவட்ட காபி டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மதுரை மாவட்ட காபி டீ வர்த்தக சங்க தலைவர் மீனாட்சி சுந்தரேஸ், “ஆவின் பால் விலை உயர்ந்துள்ளது. ஆவின் பால் நிறுவனம் அரசு சேவை நிறுவனம், இதனை தனியார் பால் நிறுவனங்களோடு ஒப்பீடு செய்து பால் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மதுரை மாவட்டத்தில் காபி,  டீ விலையை 3 ரூபாய் உயர்த்தி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளோம்.

ஆவின் பாலின் விலையை குறைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் டீ கடைகளில் பேப்பர் கப்பில் டீ வழங்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்தார்.