அவனியாபுரத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

 
tasmac

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Jallikattu

பொங்கல் பண்டிகையையொட்டி  ஜல்லிக்கட்டு போட்டியானது நாளை மதுரை அவினியாபுரத்திலும்,  16ஆம் தேதி பாலமேடு கிராமத்திலும்,  17ஆம் தேதி அலங்காநல்லூரிலும்  நடைபெற உள்ளது.  குறிப்பாக பாலமேடு , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது.  ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதி, காளைகளை திறந்து விட கொண்டு வரப்படும் இடம், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் இடம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம்  பார்வையிட்டு உள்ளது.இதுவரை மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9600 க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.

Tasmac

இந்நிலையில் அவனியாபுரத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை அவனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க இருக்கும் நிலையில்,  அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.