மோசடி கும்பலால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்!

 
நெ

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கு அடிமைப்படுத்தப்பட்டு, தாக்கியும், துன்புறுத்தியும் கஷ்டப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து தனியார் ஏஜெண்ட் மூலம் பலர் ஐ.டி. வேலைக்காக துபாய் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணி இல்லை எனக்கூறி அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கேயும் பணி இல்லை என கூறி அவர்களை அங்கும் இங்குமாய் அலைகழித்துள்ளனர். மேலும் கொடுமையாக தாக்கப்பட்டும், சட்டத்திற்கு எதிராக பணி செய்யுமாறும் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இங்கிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர். 

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாக அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ, போட்டோக்களை முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மியான்மரில் இருந்து மீட்க வேண்டும் என்று செல்வபெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.