இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

 
RN Ravi

இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

சென்னை எம்.ஆர்.சி நகரில் 12 வது இந்திய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 
மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

rn

கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: முந்தைய காலங்களில் ஒவ்வொரு முறையும் ஆட்சி புதிதாக அமையும்போது புது புது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நிதி ஒதுக்குவார்கள் அதற்காக 1 ஆண்டு செலவிடுவார்கள் ,நிதி ஒதுக்குவார்கள் ஆனால் ஆட்சியின் 4ஆம் ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தல் குறித்து யோசிப்பார்கள் என பேசினார். மீண்டும் ஆட்சிக்கு வர கூடிய கட்சி முதலில் இருந்து அதனை மீண்டும் தொடங்குவார்கள் எனவும் கூறினார். 

ஆனால் தற்போது இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும்,இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாகவும் அதனை தான் பிரதமர் ஒரே பாரதம் உன்னத பாரதம்  ( தமிழில்) ஆளுநர் கூறினார். மேலும் பல சாதனைகளை தற்போது இந்தியா செய்து வருவதாக கூறிய அவர் 150 நாடுகளுக்கு நாம் கொரோனா தடுப்பூசி வழங்கி இருக்கிறோம்,இது தான் புதிய இந்தியா எனவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளது என தெரிவித்தார்.