சமஸ்கிருத மொழியில் உறுதிமொழியேற்றது கண்டிக்கதக்கது - ராதாகிருஷ்ணன் காட்டம்

 
radhakrishnan

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழியேற்ற விவகாரம் கண்டிக்கதக்கது என தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொரோனா காலகட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மையம் விருதுகள் வழங்கும் நிகழ்வு  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் காலகாலமாக தமிழ் மொழியில் தான் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சம்பவம்  கண்டிக்கத்தக்கது.  இதற்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள hippocraric oath  மட்டும் தான் ஏற்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. 

Madurai Medical collage

ஐஐடியில் 198 நபர்கள் இதுவரை கொரொன பாதித்து உள்ளது. அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இன்று ஒரு நபருக்கு மட்டுமே தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி விவகாரத்தில் மக்களுடைய ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்களை வற்புறுத்த முடியாது அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். 40 லட்சம் பேர் முதல் தவணையும், 1.48 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 10 லட்சம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றார். தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் மெசேஜ் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு அவர்களை தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.