ஒன்றிய அரசு என அரசியல் செய்வதும் தவறு தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி. பதிலடி

 
rn ravi

ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை, ஆனால் அதை அரசியலாக்கும் போது தான் பிரச்னை ஆகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் இங்கிருந்து தான் பிரிவினை உண்டாகிறது. ஆகவே தமிழ்நாட்டை தமிழகம் என்றே அழைப்போம் என கூறினார். தமிழக ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன. இந்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதின் விளைவு தான் நேற்று சட்டப்பேரவையில் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை, ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்னை ஆகிறது. ஒன்றிய அரசு என அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்னையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு என்ற பிரச்னை பற்றி தமிழ்நாட்டை தாண்டி யாருக்கும் தெரியாது. இவ்வாறு கூறினார்.