தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்ஜான் வாழ்த்து

 
rn

தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

தமிழகம் முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த ரமலான் பண்டிகை நேரத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

RN Ravi

நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனித குலச் சேவைக்கு நம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் இது.முகமது நபியின் அன்புணர்வு, அறவுரை குறித்த போதனைகள், எக்காலத்தும் நம்முடன் நின்று, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டுப்பற்றுடன் கூடிய, தாய் நாட்டு மீதான உயர்வு மனப்பான்மையுடன் நாம் நேர்மையான, முற்போக்கான வாழ்க்கையை நடத்திட நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

சமுதாய மற்றும் வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்கான அன்பைப் பரப்பவும், போதிக்கப்படும் தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீகப் பாதையை கடைப்பிடிக்க இந்த நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகின்றேன்.