காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட வேண்டும் - முதலமைசர் பேச்சு

 
stalin

காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் , தலைமைச் செயலாளர் இறையன்பு,  தமிழ்நாடு  டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  குற்ற சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுப்பது,  சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

MK Stalin

காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும். மாதாந்திர ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி விசாரணை நிலையை கண்காணிக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும் முக்கிய தகவல்களை கொண்டு முழுமையாக கண்காணிப்போடு செயல்பட வேண்டும்.  சார்ஜ் ஷீட் பைல் பண்ணுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  அதில் தாமதம் காணப்பட்டால் நீதிக்கு நாம் செய்யும் பிழை.  காவல் கண்காணிப்பாளர்கள், களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.  கிராம, நகர மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது கலந்துரையாட வேண்டும். இவ்வாறு கூறினார்.