பெரும் பரபரப்பு!...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது

 
annamalai

பாஜகவில் இருக்கும் நடிகைகளை தரக்குறைவாக பேசிய திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசார் கைது செய்தனர். 

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய, திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்ட டுவீட்டுக்கு, டுவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டார் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி. இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நடிகைகள் மற்றும் பெண்களைப் பற்றி இழிவாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  

dmk hate speech

இந்நிலையில், பாஜகவில் இருக்கும் நடிகைகளை தரக்குறைவாக பேசிய திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பெண்ணியத்தின் கண்ணியத்தை ஆளும்  கட்சியினர் தொடர்ந்து தவறாக பேசி வருவதாக முழுக்கம் எழுப்பினர். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.