தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்து

 
Annamalai

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.  பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் பொங்கல் விழா களைக்கட்டுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதை நினைவூட்டும் வகையில் வேளாண்மையை தமிழர்களின் முதன்மைத் தொழிலாக வைத்து போகி பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டுமின்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  பழைய உடைகள் , பொருட்களை தீயில் இட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி பண்டிகை இருந்து வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கிணங்க, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை எண்ணங்களை விதைப்போம். இருளை அகற்றி, அனைவரின் வாழ்க்கையும் ஒளி விட, தீமைகள் விலகி, நன்மைகள் பெருகிட, எனது இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.