திமுக அரசு அமைய காரணமே கிறிஸ்தவர்கள் தான் - சபாநாயகர் அப்பாவு சர்ச்சை பேச்சு

 
appavu

திராவிட மாடல் என சொல்லுகின்ற இந்த திமுக அரசு அமைய காரணமே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் என சபாநாயகர் அப்பாவு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துாய பவுல் குருத்துவ கல்லுாரியின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அப்பாவு பேசியதாவது: தமிழகம் கல்வியில் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் தான்.  அவர்கள் இல்லையென்றால், பீஹார் போல் தமிழகமும் இருந்திருக்கும். இந்த அரசு உங்கள் அரசு உங்களால் உருவாக்கப்பட்ட அரசு நீங்கள் பட்டினியாக இருந்து உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் ஆண்டவரிடம் வேண்டி விரும்பி கொண்டு வரப்பட்ட அரசு. இந்த அரசு உங்களுக்கான அரசு.


 சமூக நீதி திராவிட மாடல் என்று சொல்லுகின்ற இந்த அரசுக்கு, முழு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தான். கிறிஸ்தவ பாதிரியர்கள் தான்.தமிழக வளர்ச்சியில் உங்களை நீக்கிவிட்டால், வளர்ச்சி ஒன்றுமே இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதர்கள் என்று சொன்னாலும், சமூக நீதியில் திராவிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அது உங்கள் உழைப்பு தான். நீங்கள் தான் அஸ்திவார கற்கள். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இந்த தமிழகம், இன்றைய தமிழகம். இவ்வாறு பேசினார்.ஒரு மதத்தை வைத்து அரசியல் செய்யும் வகையில் அப்பாவு பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ளது. மேலும் அப்பாவு பேசிய கருத்து இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.