முதல்வருக்காக 2 மணி நேரம் காத்திருந்த ஆளுநர்

 
rangasamy

புதுச்சேரி ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்கு, வழக்கம் போல 2.30 மணி நேரம் தாமதமாக  முதல்வர் ரங்கசாமி வந்தார். 

Tamilisai rangasamy

புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகை சார்பில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்குமாறு முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்து இருந்தார். பொங்கல் விழா இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. 

முதல்வர் ரங்கசாமி தவிர, தமிழிசை அழைப்பு விடுத்து இருந்த அனைவரும் வந்தனர். இதையடுத்து விழா முடிந்து சேர்கள் அகற்றபட்டன. நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் வெளியேறினர்.
இந்த நிலையில் சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 8 மணிக்கு சொன்ன நிகழ்ச்சிக்கு 10.35 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகைக்கு வந்தார். பின்பு தமிழிசைக்கு பொன்னாடை போர்த்தி விட்டு, வரவேற்றார். பின்னர் டிபன் சாப்பிட்டு ரங்கசாமி புறப்பட்டார்.


புதுச்சேரி  ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கரகாட்டம், புலி ஆட்டம், மானாட்டம், மயிலாட்டம் என கிராமிய நடனங்கள் நடைபெற்றது. அப்போது தப்பாட்டம் வாசித்த போது, மெய் மறந்து பார்த்த பெண் அமைச்சர் சந்திர பிரியாங்கா, தனது தலையை ஆட்டியும், காலை தரையில் தட்டியும் ரசித்து பார்த்தார்.