அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பாண்மையுடன் இதை செய்ய வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்..

 
அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பாண்மையுடன் இதை செய்ய வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்..

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  வரவேற்பு விளம்பரங்களில்  பிரதமர் மோடியின் படத்தையும் வைக்க வேண்டும்  என  தெலங்கானா மற்றும் புதுச்சேரி  மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.  

செஸ் ஒலிம்பியாட்:

 சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.   இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.   இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி  வைக்கவுள்ளார்.  செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனது. ஆனால் அந்த விளாம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவுல்லை.  இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.  

அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பாண்மையுடன் இதை செய்ய வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்..

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி  கடற்கரை சாலை காந்தி திடலில் தியாக சுவர் நிறுவப்பட்டுள்ளது. இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்பட்டுள்ளது.  இந்தக் கல்வெட்டினை இன்று காலை ஆளுநர்  தமிழிசை பதித்தார்.  இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “ தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் வருவது மகிழ்ச்சிக்குரியது. இதில் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை. இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்று  என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக  முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்” என்று கூறினார்.