சுப. தமிழ்ச்செல்வன் நினைவுநாள் - விசிக வீரவணக்கம்

 
p

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன்  நினைவுநாளில் அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இன்று காலை 10.30 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது என்று அறிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

சு

கடந்த 2.11.2007 அன்று  பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.  கிளிநொச்சியில் நடந்த இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணி செய்தவர் சுப. தமிழ்ச்செல்வன்.

 பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றார்.